News March 27, 2024
திருப்பூர்: நாயை அடித்துக்கொன்ற கஞ்சா ஆசாமி

திருப்பூர்: மதுரையைச் சேர்ந்தவர் தஸ்தகீர்(40). அவிநாசி, வேலாயுதம்பாளையத்தில், நேற்று முன்தினம், கஞ்சா போதையில் தெருநாயை பிடித்து, பின்னங்கால்களை கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரன்பேரில் அவிநாசி போலீசார், இறந்த நாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தஸ்தகீரை கைது செய்தனர்.
Similar News
News August 5, 2025
திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள்,<
News August 5, 2025
திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஆக.6) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, கருவம்பாளையம், ஆலங்காடு, கல்லப்பாளையம், வெங்கடாசலபுரம், கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், ராயபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கொங்கனகிரி, கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News August 5, 2025
திருப்பூர் மாநகரில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு நேரில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, 100 எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.