News December 24, 2025
திருப்பூர்: நல்ல சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <
Similar News
News December 28, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்! சிக்கிய 4 பேர்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்திய போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் கதிரேசன் என்ற நபர் நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கதிரேசன் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு பெண் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
News December 28, 2025
தாராபுரம் அருகே விபத்து!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அடுத்துள்ள சாலக்கடை அருகே உள்ள அப்பிம்பட்டி நால்ரோடு பகுதியில் சொகுசு காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 28, 2025
திருப்பூர்: பயிற்சி முடிந்து காவல் படையில் மோப்ப நாய் ‘சக்தி’

திருப்பூர் மாநகர காவல் ஆணையரால் பெயரிடப்பட்ட ‘சக்தி’ என்ற மோப்ப நாய், கோவையில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆறு மாத பயிற்சி பெற்றது. பயிற்சி முடிவடைந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் மோப்ப நாய் படையில் இன்று சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது இனி மாநகர பகுதி காவல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.


