News April 19, 2024

திருப்பூர் தொகுதியில் 72.02 சதவீதம் வாக்குப்பதிவு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை ஆறு மணி முதல் நடைபெற்றது. தொடர்ந்து 6:00 மணிக்கு உள்ளாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 72.02% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 29, 2025

பல்லடம்: மாநாட்டிற்கு 10 வகையான தின்பண்டங்கள்

image

வெல்லும் தமிழ் பெண்கள் மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சுமார் 1.5 லட்சம் நாற்காலிகளில் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் தனிப்பையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

News December 29, 2025

திருப்பூர்: POST OFFICE-ல் வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News December 29, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

திருப்பூர் தெற்கு போலீசார் காங்கேயம் ரோடு சி.டி.சி. கார்னர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரிய கடை வீதியைச் சேர்ந்த முகமது அலி(39) என்பதும், அவரிடம் 200 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!