News August 20, 2025

திருப்பூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

திருப்பூர் மாவட்டம் கடத்தூரில் உள்ளது, புகழ்பெற்ற அர்ச்சுனேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம். அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம், குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. திருமணத் தடை உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

Similar News

News February 1, 2026

திருப்பூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

திருப்பூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.02) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியகவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News February 1, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் வடக்கு போலீசார், நேற்று ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தனிஷ்வர் முர்மு(42) என்பதும், அவரிடம் 230 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!