News October 25, 2024
திருப்பூர் தலைப்புச் செய்திகள்

1.பல்லடத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது.
2.அவிநாசி: சார்பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
3.திருப்பூர் மாநகராட்சி பொறியாளராக வாசுகுமார் மாற்றம்
4.அவிநாசியில் ரூ.6.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
5.உடுமலை: பூளவாடி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
6.திருப்பூரில் விஜய் கட்சியின் பேனர் கிழிப்பு -அப்பகுதியில் பரபரப்பு
Similar News
News August 25, 2025
திருப்பூர்: விளையாட்டால் நடந்த விபரீதம்!

திருப்பூர்: தாராபுரத்தில் காதணி விழாவிற்கு சென்ற காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த்(19) நேற்று(ஆக.24) அமராவதி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அஸ்வந்த், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் யாரும் குளிக்க கூடாது, என போடப்பட்ட எச்சரிக்கையை மீறி விளையாட்டாக குளித்ததால் இந்த விபரீதம் நடந்தேறியுள்ளது எனத் தெரிவித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 25, 2025
திருப்பூர்: ஐ.டி.பி.எல் அதிகாரிகள் சிறை பிடிப்பு

2011 ஆம் ஆண்டு கொச்சியில் இருந்து பெங்களூருக்கு விளைநிலங்கள் வழியாக ஐடிபிஎல் நிறுவனம் விவசாயிகளின் போராட்டங்களை மீறி எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இங்கு எரி காற்று குழாய்களை அமைக்க அளவீடு செய்ய இன்று இந்த நிறுவன அதிகாரிகள் இங்கு வந்தனர். இங்குள்ள விவசாயிகள் இவர்களை சிறைப்பிடித்து வைத்ததால் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்தனர்.
News August 25, 2025
திருப்பூர்: மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி பகுதிகளில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 இலக்கை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.