News April 11, 2025
திருப்பூர் சத்துணவு மையத்தில் வேலை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இந்த பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சியில் சமர்ப்பிக்கலாம்.
Similar News
News October 28, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம், ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்!
News October 28, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (27.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்துப பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
News October 27, 2025
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 315 மனுக்கள்!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் மணிஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 315 மனுக்களை அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


