News January 24, 2026
திருப்பூர் கொலை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருப்பூர், கங்கா நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, அனில் குமார் ஜெனா என்பவர் கொலை செய்த வழக்கில், இளம் சிறார் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இளைஞரை ஓராண்டு செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் வைக்க நீதிபதி செந்தில் ராஜா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 26, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, சென்னிமலைபாளையம், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கொங்கநாயக்கன்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், காஞ்சிபுரம், மணியக்காரன்பாளையம், செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், கரட்டாங்காடு, காளிநாதம்பாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 26, 2026
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்! அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் பெரியாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரித்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அறிவு மற்றும் மைதீன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், 12.2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News January 25, 2026
திருப்பூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். (ஷேர் பண்ணுங்க)


