News August 17, 2025

திருப்பூர்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு க்ளிக் செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
✅கூட்டு பட்டா
✅விற்பனை சான்றிதழ்
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

Similar News

News August 17, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவரிடம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தியாகு என்பவர் பாலியல் ரீதியாக துன்பறுத்தி, வெளியே சொல்ல கூடாது என சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். புகாரின் பேரில் தியாகு (24) அவரது மனைவி ரஞ்சிதா (22) அவரது தாய் மற்றும் ஜெயந்தி (45) ஆகியோர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

News August 17, 2025

குறைந்த விலையில் மல்பெரி மரக்கன்றுகள் வேண்டுமா?

image

திருப்பூர் விவசாயிகளே பட்டு வளர்ச்சித் துறையின் அரசுப் பண்ணைகளில் மல்பெரி மரக்கன்றுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. உடுமலைப்பேட்டையில் உள்ள “பார்மர்ஸ் டிரைனிங் சென்டர்” – மைவாடி-யில், இருப்பு வைக்கப்பட்டுள்ள 25,000 V1 ரக மல்பெரி கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், அதிகாரி கண்ணன் அவர்களை 87786 97224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

போலி இ-சலான் இணையதளங்கள்: திருப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

image

வாகன ஓட்டிகளே! போலியான இ-சலான் இணையதளங்கள் குறித்து திருப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. https://echallanparivahan.in/ போன்ற போலியான தளங்களைத் தவிர்க்கவும். அதிகாரப்பூர்வமான https://echallan.parivahan.gov.in/ என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். இதே போன்ற மோசடிச் செய்திகள் வந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணில் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!