News December 15, 2025

திருப்பூர்: கூட்டுறவு வங்கியில் வேலை: ரூ.32,000 சம்பளம்!

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 17, 2025

திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.18) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, வளையாங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி தியேட்டர், சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், ராதா நகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 17, 2025

பல்லடத்தில் தேதி குறித்த DMK

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29-ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. 29-ம் தேதி மாலை 4 மணி அளவில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த முறை கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்ற பல்வேறு வியூங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 17, 2025

திருப்பூருக்கு வெடிகுண்டு! தட்டி தூக்கிய போலீஸ்

image

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ்(40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!