News January 22, 2026
திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாநகரில் போதை பொருட்கள் வழக்கில் கைப்பற்றப்பட்ட, 38 இருசக்கர மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் துறை சார்பில், நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படும் எனவும், ஏலம் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 27 மற்றும் 28ஆம் தேதிகளில், இந்த வாகனங்களை நேரில் பார்வையிடலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
திருப்பூரில் தட்டி தூக்கிய போலீஸ்: 13 பேர் அதிரடி கைது!

வங்கதேசத்திலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் வங்கதேசத்தினர் அதிகளவு ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் கடந்த ஒரு வார காலமாக திருப்பூரில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் முதலிபாளையம் , விஜயாபுரம் மற்றும் 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பெண்கள் உட்பட 13 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News February 5, 2026
திருப்பூரில் இங்கு மின்தடை அறிவிப்பு!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (பிப்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜர் நகர், மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, கைக்காட்டிப்புதூர், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 5, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.05) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


