News October 16, 2025

திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

image

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 இருசக்கர மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்களை வரும் 24ஆம் தேதி நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 16, 2025

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூரில் தீபாவளியை ஒட்டி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காங்கேயம், கரூர், கோவை, பொள்ளாச்சி, சோமனூர், ஈரோடு, பவானி செல்லும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தும். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்தும், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும்.

News October 16, 2025

JUSTIN: திருப்பூரில் தற்காலிக பேருந்து நிலையம்

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பூரின் மூன்று பேருந்து நிலையங்களிலிருந்தும் சுமார் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரே, பழைய அரசு மருத்துவமனை வளாகம், தற்காலிக பேருந்து நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. சேலம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது.

News October 16, 2025

திருப்பூரில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

image

திருப்பூர் மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!