News October 18, 2025
திருப்பூர்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
Similar News
News October 18, 2025
திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் பாலன் (26). பனியன் கம்பெனி ஊழியர். இந்நிலையில் நேற்று பல்சர் பைக்கில் பாலன் சென்றுள்ளார். அப்போது தனியார் பேக்கரி அருகே திரும்பிய போது, எதிரே வந்த லாரி பாலன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 18, 2025
திருப்பூர்: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <
News October 18, 2025
திருப்பூர் மக்களே இன்று கவனம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிப்பு. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!