News October 11, 2025
திருப்பூர்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 – 50400 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
Similar News
News November 5, 2025
திருப்பூரில் இப்பகுதியில் மின்தடை

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, மாஸ்கோ நகர், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 5, 2025
திருப்பூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர் விஜயமங்கலம் வாய்ப்பாடி அருகே 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடைப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் பலி

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (56). இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு, நாகமநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டுக்கு பைக்கில் வந்த போது பின்னால் வந்த பைக் மோதியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


