News February 17, 2025
திருப்பூர்: கல்விக்கடன் ரூ.307 கோடி வழங்க இலக்கு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக் டர் கிறிஸ்துராஜ் தலைமையில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-26 நிதியாண்டுக்கான திருப்பூர் மாவட்டத்தின் கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார். இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், 2025-26ம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.46,004.98 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
முருகானந்தம் கொலை வழக்கில் முன் ஜாமீன் ரத்து

தாராபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி தாளாளர் தண்டபாணி உள்ளிட்ட சில குற்றவாளிகள் முன் ஜாமின் கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் மனதாக்கல் நேற்று செய்தனர். திருப்பூர் நீதிபதி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.
News August 21, 2025
திருப்பூர்:வாடகைப் பிரச்னைக்கு ஒரே தீர்வு!

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
News August 21, 2025
அவிநாசியில் சாயம் கலந்த பட்டாணி பறிமுதல்

அவிநாசி கைகாட்டிப்புதுார் வாரச்சந்தையில் சாயம் கலந்த பட்டாணி விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் பிரபு சந்தையில் ஆய்வு நடத்தி, ரசாயன சாயம் பூசப்பட்ட 6 கிலோ பட்டாணியை ஒரு வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்தார். முதல் முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீண்டும் இதுபோல் நடந்தால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது