News February 11, 2026

திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் 5 பேர் கைது

image

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வந்த வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22) , விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனார்த்தனன் (18) என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து சுமார் 22.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 13, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் நாளை (பிப்.14, சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம் மற்றும் புதிய கார்டு விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலக முகாமில் பங்கேற்றுப் பயன் அடையுமாறு கலெக்டர் மனிஷ் நாரணவரே கேட்டுக்கொண்டுள்ளார். SHAREIT

News February 13, 2026

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே அருள்ஜோதிபுரம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!