News September 9, 2025
திருப்பூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

காங்கேயம், படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (20). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி செளமியா (23). இவருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் செளமியா கடந்த ஒரு வாரமாக கணவர் ஜீவாவிடம் சினிமா பார்க்க அழைத்து செல்லுமாறு கேட்டதாகவும், ஆனால் ஜீவா அழைத்து செல்ல வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செளமியா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News September 9, 2025
திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க<
News September 9, 2025
திருப்பூரில் தவெக தலைவர் விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் அக்.4,5ஆம் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் பிரச்சார நிகழ்விற்கு தற்போது காவல்துறையிடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
திருப்பூர்: அரசு வேலை அறிவிப்பு! SUPER சம்பளம்

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<