News February 12, 2026

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (11.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 12, 2026

திருப்பூர்: ஆதார் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 12, 2026

திருப்பூர் அருகே சோகம்: பள்ளி மாணவன் விபரீத முடிவு!

image

திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த பந்தம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். இவர்களது மகன் கபிலன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 12, 2026

திருப்பூரில் வங்கதேசத்தவர் அதிரடி கைது

image

திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தங்கி வேலை பார்ப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்துக்கு சென்று உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த ரபிகுல் இஸ்லாம் என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!