News October 3, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 02.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியில் உள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
Similar News
News October 3, 2025
திருப்பூரில் 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது தொழில்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காமல் பணி செய்ய வைத்த 72 நிறுவனங்கள் மீது தொழில்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பதோடு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
திருப்பூரில் கண்காட்சியை திறந்து வைத்த வானதி சீனிவாசன்

திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜி.எஸ்.டி வரி குறைப்பு விளக்க கூட்டம், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, வானதி சீனிவாசன் ஜி எஸ் டி வரி குறையும் பொருட்களின் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
News October 2, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

திருப்பூர், அவிநாசியை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறார். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.