News February 28, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 28.02.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம், பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், காவல் துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவி 108 அழைக்கவும்.

Similar News

News March 1, 2026

திருப்பூரில் தவெகவிற்கு பெருகும் ஆதரவு!

image

திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்டச் செயலாளர் பாலமுருகனை நேரில் சந்தித்த பல்சமய நட்புறவு கழகத்தினர், வரும் தேர்தலுக்கான தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதற்கான ஆதரவுக் கடிதத்தை மாவட்டத் தலைவர் ஷாஜகான் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்டத் துணைத் தலைவர் நூர் முகமது மற்றும் மாநகர இளைஞரணி பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் பாலமுருகனுக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

News March 1, 2026

திருப்பூரில் நைஜீரியா நாட்டவர்: அதிரடி கைது!

image

திருப்பூர் காசிபாளையம் பார்வதி நகரில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் முறைகேடாக தங்கி இருப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் விசா காலம் முடிந்தும் திருப்பூரில் தங்கி இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜான் கெலுச்சி ஒப்போட்டடா என்பவரை கைது செய்தனர்.

News March 1, 2026

திருப்பூரில் அதிரடியாக மாற்றிய ஆட்சியர்!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார். இதன்படி காங்கயம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பணியில் சேராதவர்களுக்கு ஊதியமில்லா விடுப்பாகக் கருதப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

error: Content is protected !!