News March 6, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (05.03.2025) இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
Similar News
News March 6, 2025
வங்கி கணக்கில் பணம் மாயம்

திருப்பூரில் எஸ்பிஐ வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை மாயமானதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து வங்கியில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
News March 5, 2025
திருப்பூரில் முதல் நாள் தேர்வில் 513 பேர் ஆப்சென்ட்

தமிழகம் முழுவதும் இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 513 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 5, 2025
திருப்பூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

காங்கேயம் அடுத்த மடவளாம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அரசு மதுபான கடை தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சாலையோர மரத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.