News May 21, 2024
திருப்பூர் ஆண்களுக்கு ரூ.3100 ஊக்கத் தொகை

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான இலவச குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நாளை (மே 22) நடைபெறுகிறது. கத்தியின்றி ரத்தமின்றி தழும்பின்றி 10 நிமிடத்தில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பக்க விளைவுகளோ, இல்லற இன்பம் மற்றும் உடல் உழைப்புக்கு பாதகமோ என எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும் இந்த சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3100 வரை வழங்கப்படுகிறது.
Similar News
News November 5, 2025
திருப்பூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர் விஜயமங்கலம் வாய்ப்பாடி அருகே 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடைப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் பலி

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (56). இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு, நாகமநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டுக்கு பைக்கில் வந்த போது பின்னால் வந்த பைக் மோதியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

எர்ணாகுளத்தில் இருந்து பாரவுனி (பீகார்) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-பாரவுனி (வண்டி எண்.06159) ஒரு வழி சிறப்பு ரெயில் நாளை 5-ம் தேதி (புதன்கிழமை) எர்ணாகுளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு வரும் 8-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பாரவுனி ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.


