News January 28, 2026

திருப்பூர் ஆட்சியர் உத்தரவு: மீறினால் கடும் நடவடிக்கை!

image

வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான விடுதிகளை நாள் முழுவதும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மனிஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News February 8, 2026

திருப்பூரில் வசமாக சிக்கிய பெண்

image

திருப்பூர் தெற்கு போலீசார் பூ மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அங்கேரிபாளையம், அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த சர்மிளா(49) என்பதும் அவர் அந்த பகுதியில் கேரளா லாட்டரி விற்றதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 10 கேரளா லாட்டரியை பறிமுதல் செய்தனர்.

News February 7, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.07) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News February 7, 2026

திருப்பூர்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

திருப்பூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. *இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

error: Content is protected !!