News November 15, 2025

திருப்பூர் அருகே 11 பேர் அதிரடி கைது!

image

திருப்பூர், குன்னத்தூர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் சுசீலா தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில், பணம் வைத்துச் சூதாடிய 11 நபர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

திருப்பூர்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

திருப்பூர் அருகே தொழிலாளி தற்கொலை!

image

பொங்கலூர் அருகே உள்ள குருநாதன்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளியான இவர் கடந்த 8 ஆம் தேதி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்று பாண்டி நேற்று உயரிழந்தார். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 15, 2025

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூர் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காங்கேயம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம், அரசம்பாளையம், சாவடிபாளையம், தம்மரெட்டிபாளையம், ஒட்டபாளையம், கீரனூர், பரஞ்சேர்வழி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!