News December 26, 2025

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் அம்மாசி. பனியன் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக உள்ள இவர், நேற்று பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது, சிறுமி ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், அம்மாசி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். மேலும் வாகனம் ஓட்டிவந்த சிறுமி மற்றும் உடனிருந்த சிறுமிக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 26, 2025

திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 26, 2025

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வரபாளையம், காட்டூர், எஸ்.என்.பாளையம், பொங்கலூர், ஜி.என்.பாளையம், குன்னத்தூர், வேலம்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட குன்னத்தூர், குறிச்சி, தாளப்பதி, காவுத்தம்பாளையம், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 25, 2025

திருப்பூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!