News June 12, 2024

திருப்பூர் அருகே பெருங்கற்கால கல்வெட்டுகள்

image

மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மடத்தூர் மயிலாபுரம் பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக 20-க்கு மேற்பட்ட பெருங்கற்கால கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. எனவே மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News

News August 15, 2025

திருப்பூரில் இலவச Tally பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GSTபயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

திருப்பூர்: பல்லடம் புத்தரச்சல் 108 பைரவர் ஆலயம்!

image

திருப்பூர், பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில், புகழ்பெற்ற 108 பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரத்தில் கால பைரவர் சிலை உள்ளது. சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். அஷ்டமி நாளான நாளை (ஆக.16), 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 15, 2025

திருப்பூர் சுதந்திர தின கொண்டாட்டம்

image

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், முதல்வர் மனோன்மணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!