News September 27, 2025
திருப்பூர் அருகே துடிதுடித்து பலி!

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் (80) கடந்த 23ம் தேதி வீட்டு வெளியே விறகு அடுப்பில் தண்ணீர் சூடாக்கும் போது, எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றி, உடலுழுவதும் பரவியது.அருகிலிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற ரங்கம்மாள் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Similar News
News January 2, 2026
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

திருப்பூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 2, 2026
திருப்பூர்: கல்லூரி மாணவன் தற்கொலை

திருப்பூர், திருமுருகன்பூண்டியை அடுத்த தேவராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். இவருடைய மகன் ரியாக் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனளிக்காதால் மனமுடைந்து நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News January 2, 2026
திருப்பூர்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <


