News September 19, 2025
திருப்பூர் அருகே ஆற்றில் வந்த பெண் சடலம்!

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மடத்துக்குளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
திருப்பூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருப்பூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் <
News September 19, 2025
உடுமலையில் வேலை தேடுவோர் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது எனவே உடுமலை பகுதியில் வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
திருப்பூர் தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு சேவை

இந்திய தபால்துறை சார்பில் பல்வேறு சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட காந்திநகர் தபால் அலுவலகத்தில் ரயில்வே பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின் முன்பதிவு மற்றும் தட்கல் முன் பதிவுகளை செய்து கொள்ள சேவை தொடங்கப்பட்டிருப்பதாக திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.