News April 12, 2025
திருப்பூர்: அங்கன்வாடி மையத்தில் வேலை!

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, 10 அங்கன்வாடி பணியாளர்; 33 உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் நடக்கிறது. அங்கன்வாடி பணியிடங்களில் பணியாற்ற விரும்புவோர், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். வரும், 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 2, 2025
திருப்பூர்: What’s App இருக்கா உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 2, 2025
திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் அதிரடி கைது

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகுமார் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
News November 1, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், அவிநாசி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


