News December 17, 2025
திருப்பூருக்கு வெடிகுண்டு! தட்டி தூக்கிய போலீஸ்

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ்(40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 21, 2025
பல்லடம் அருகே சோக சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வரும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளராக இருப்பவர் தனராஜசேகர். இவர் கல்லூரியில் உள்ள சிறு சிறு விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது, புல் அரக்கும் எந்திரம் உடலில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 21, 2025
திருப்பூருக்கு பெருமை: தட்டித்தூக்கிய நிறுவனங்கள்!

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக, நாடு முழுவதும் ஜவுளி ஏற்றுமதியில் சிறந்த நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பூரைச் சேர்ந்த 11 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக ஏற்றுமதி, சிறந்த செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
மூலனூர்–தாராபுரம் சாலையில் இருசக்கர வாகன விபத்து

திருப்பூர் மாவட்டம் டிசம்பர் 20 இன்று விபத்து .விபத்தானது மூலனூர் டு தாராபுரம் சாலை தனியார் ஸ்பேர் பார்ட்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயம். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் ஏற்றி மூலனூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் யார் என்று விவரம் தெரியவில்லை .மூலனூர் காவல்துறை விசாரணை


