News August 16, 2024

திருப்பூருக்கு இனி HAPPYதான்

image

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 9, 2026

திருப்பூரில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsptprdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0421-2482816 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

திருப்பூர்: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

அவிநாசி அருகே விபத்து

image

கேரளாவில் இருந்து விறகு ஏற்றிக் கொண்டு அவிநாசிக்கு வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை மீட்ட அவிநாசி போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!