News August 12, 2024

திருப்பூரில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

image

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது ஒரே மகன் பிரதீஷ்(5). இவர் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News March 9, 2026

திருப்பூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

image

திருப்பூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 9, 2026

திருப்பூர்: தட்டித்தூக்கிய திமுக!

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 28 வது வார்டு மாஸ்கோ நகர் பகுதியில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய மாவட்ட திமுக மாணவரணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவான செல்வராஜ் முன்னிலையில், திமுகவில் இணைந்து கொண்டனர்.

News March 9, 2026

திருப்பூர் அருகே ரயில் மோதி ஒருவர் பலி!

image

ஊத்துக்குளி-விஜயமங்கலம் இடையே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!