News December 14, 2024
திருப்பூரில் 491.90 மீட்டர் மழைப்பொழிவு

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு பகுதியில் 20மி.மீ ,தெற்கு பகுதியில் 21 மி.மீ, தாராபுரத்தில் 32 மி.மீ, உப்பாறு அணை பகுதியில் 52 மி.மீ, காங்கேயம் அடுத்த வட்டமலை கரை ஓடை பகுதியில் 36.20 மி.மீ, வெள்ளகோவிலில் 20 மி.மீ, திருமூர்த்தி அணை பகுதியில் 30 மி.மீ என மாவட்டம் முழுவதும் 491.90 மி.மீ என மாவட்ட முழுவதும் சராசரியாக 24.60 மி.மீ மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாதம்தோறும் வெள்ளிக்கிழமை ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறுவது வழக்கமாக வந்தது. மூன்று மாத காலமாக மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறாததால், இன்று(ஆக.22) திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பெரும் திரளாக முகாமில் கலந்து கொண்டனர்.
News August 22, 2025
திருப்பூர் மருத்துவமனையில் செல்போனை மீட்ட போலீசார்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஊதியூர் அருகே ராசிபாளையத்தைச் சேர்ந்த ரேவதி(35) என்பவர் தனது தாத்தா நாச்சி(72) என்பவருடன் வந்தார். அப்போது தனது செல்போனை தவற விட்டதை கண்டுபிடித்து மருத்துவமனை முதல்வர் மனோன்மணி முன்னிலையில் திருப்பூர் மாநகர சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் முதல் நிலைக் காவலர் செல்வகுமார் ஆகியோர் ரேவதியிடம் ஒப்படைத்தனர்.
News August 22, 2025
கோவில் நிர்வாகத்தில் பங்கேற்க விருப்பமா?

திருப்பூர் மக்களே இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் காங்கேயம் வட்டம் முத்தூரில் உள்ள அருள்மிகு செல்வக்குமாரசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in இந்த இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.