News October 16, 2025

திருப்பூரில் வெளுக்கப்போகும் மழை!

image

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

Similar News

News October 16, 2025

திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

image

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 இருசக்கர மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்களை வரும் 24ஆம் தேதி நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவர்கள் வருகின்ற 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

திருப்பூர்: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யவும்.

News October 16, 2025

திருப்பூர்: இந்த மெசேஜ் வந்தால் உஷார்!

image

திருப்பூர் மக்களே.., போலியான வாட்ஸ்ஆப் எண்களில் இருந்து ’Traffic Fine’ என மெசேஜ் வந்தால் ஏமாற் வேண்டாம். உங்களிடம் போலி ஆப்-ஐ பதிவிறக்க செய்து வங்கி விவரங்களை திருடும் மோசடி நடைபெறுகிறது. ஆகையால், அபராத விவரங்களை சரிபார்க்க https://echallan.parivahan.gov.in இணையதளத்தையே பயன்படுத்துமாறு சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!