News October 19, 2024
திருப்பூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ஆம் தேதி காலை 10:30 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். முதலில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 25, 2025
திருப்பூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE) <<17511404>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
திருப்பூர்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

திருப்பூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே கிளிக் செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.(SHARE)
News August 25, 2025
திருப்பூரில் நூற்றாண்டு கண்ட மூதாட்டி!

திருப்பூர்: கே.செட்டிப்பாளையத்தில் அன்னபூரணி என்ற மூதாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா குடும்ப சங்கமமாக நடைபெற்றது. 6 மகன்கள், 7 மகள்கள், 97 பேரன், பேத்திகள் பங்கேற்று, ஒரே மாதிரி உடை அணிந்து, அன்னபூரணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.