News September 19, 2025
திருப்பூரில் லஞ்சம் கேட்டால் உடனே Call!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsptprdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது என்ற 0421-2482816 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 3, 2026
கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
News March 3, 2026
திருப்பூர்: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS.!

திருப்பூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0421-2971141 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News March 3, 2026
திருப்பூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <


