News October 18, 2025

திருப்பூரில் ரூ.75 ஆயிரம் அபராதம்!

image

திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 16வது வார்டு சொர்ணபுரி லே-அவுட், 5வது வீதியில் அன்பழகன் என்பவர் வீட்டுக்கு குழாய் பதிப்பு பணிக்கு 77 மீ., நீளத்துக்கு குழி தோண்டி, ரோடு சேதப்படுத்தியது தெரிந்தது. உரிய அனுமதியும் இன்றி தோண்டியதால் மாநகராட்சி விதிகளின்படி, ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ரோட்டை சேதப்படுத்துவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Similar News

News October 18, 2025

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் பாலன் (26). பனியன் கம்பெனி ஊழியர். இந்நிலையில் நேற்று பல்சர் பைக்கில் பாலன் சென்றுள்ளார். அப்போது தனியார் பேக்கரி அருகே திரும்பிய போது, எதிரே வந்த லாரி பாலன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 18, 2025

திருப்பூர்: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம்.இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

திருப்பூர் மக்களே இன்று கவனம்!

image

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிப்பு. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!