News September 13, 2025
திருப்பூரில் ரூ.10 கோடி மோசடி: அதிர்ச்சி தகவல்!

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்த செய்திக்குறிப்பில்: சைபர் மோசடி குற்றங்கள் கடந்த 20 மாதங்களில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து 1700 புகார்களும் மொத்தமாக 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளார். மேலும் காவல்துறை விரைந்து செயல்பட்ட காரணத்தால் 4,75,00,000 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
திருப்பூர்: சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் கலெக்டர் மணிஷ் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர் பிரிவுகளில் 2025-26-ம் ஆண்டுக்கான சுற்றுவா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. WWW.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவும் என தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
திருப்பூர்: சென்ற மாத மின் கட்டணமே இந்த மாதமும்

திருப்பூரில் சிவ பகுதிகளில் மின் கணக்கிடு செய்யப்படாததால், கடந்த மாத கட்டணத்தையே இம்மாதமும் செலுத்தும்படி மின்பகிர்மான கழகம் கூறியுள்ளது. இதன்படி பிரிட்ஜவே காலனி பிரிவு அலுவவகத்திற்கு உட்பட்ட பகுதிகள், எஸ்.வி காலனி கோல்டன் நகர் 1 முதல் 4 வது வீதி ஜெயலட்சுமி நகர் 1 முதல் 3வது வீதி, முணியப்பன் கோவில் பின்புறம் ஆகிய பகுதிகளும் இதில் சேரும். மேலும் விவரங்களுக்கு மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
News September 13, 2025
திருப்பூர்: தமிழக அரசில் வேலை அரிய வாய்ப்பு

திருப்பூர் மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ 1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <