News November 4, 2025

திருப்பூரில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

image

தாராபுரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஆரோக்கியதாஸ் என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோ பிரிவின் கீழ் ஆரோக்கியதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News November 4, 2025

பல்லடம் அருகே தீ பற்றி எரிந்த பேருந்து

image

பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்புறம் தீ பற்றி எறிய தொடங்கியது. தொடர்ந்து உள்ளே இருந்த 15 பயணிகள் பத்திரமாக எந்த சேதமும் இன்றி உயிர்தப்பினர். இத்தீவிபத்தில் பேருந்து முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமானது

News November 4, 2025

தாராபுரம் அருகே சோகம்!

image

தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் அருகே உள்ள நல்லி கவுண்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் குளத்துப்பாளையம் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியில் உள்ளார். இவர் பணி காரணமாக இருந்தபோது திடீரென உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த அவரது தாய் எதிர்பாராதமாக நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 3, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 03.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், காங்கேயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!