News March 5, 2025
திருப்பூரில் முதல் நாள் தேர்வில் 513 பேர் ஆப்சென்ட்

தமிழகம் முழுவதும் இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 513 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2025
சிவன்மலை முருகன் கோயில் சிறப்புகள்

சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.
News March 6, 2025
திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 7ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இது கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் அறை எண்: 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைக்கவுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். (Share பண்ணுங்க)
News March 6, 2025
வங்கி கணக்கில் பணம் மாயம்

திருப்பூரில் எஸ்பிஐ வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை மாயமானதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து வங்கியில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.