News January 25, 2026
திருப்பூரில் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர் மாநகரில், தாராபுரம் சாலையில் இருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய முக்கிய போக்குவரத்து வழித்தடம். இன்று காலை அடைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, தற்காலிகமாக சாலை அடைக்கப்படுவதாக திடீரென தடுப்புகள் அமைக்கப்பட்டதால், விடுமுறை நாளான இன்று வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 30, 2026
திருப்பூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News January 30, 2026
காங்கயத்தில் வங்கதேசத்தினர் 5 பேர் கைது

காங்கயத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 5 பேரைப்பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆசன் ஹபீப் ( 22), முகமதுகம்ரூல் காசி (57). ரபீக் காசி (46), அப்சர் இஸ்லாம் (47), சோனி ஷேக் (42) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.


