News March 13, 2026
திருப்பூரில் பாலியல் தொழில்: அதிரடி கைது!

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக தினேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சட்ட ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, ஓராண்டு குண்டல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 7, 2026
திருப்பூர்: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 7, 2026
திருப்பூர்: மொத்த வேட்பு மனு தாக்கல்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மொத்தம் 193 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 133 ஆண்கள் மற்றும் 60 பெண்கள் அடங்குவர். அதில், திருப்பூர் தெற்கில் அதிகபட்சமாக 32 பேரும், பல்லடத்தில் 31, திருப்பூர் வடக்கில் 28 தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக தாராபுரம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகள் 17 பேர் தாக்கல் செய்துள்ளனர்.
News April 7, 2026
திருப்பூரில் ஒரே நாளில் இத்தனை பேரா?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு வழங்கும் இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 147 வேட்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திருப்பூர் தெற்கு தொகுதியில் 28 வேட்பு மனுக்களும், பல்லடம் தொகுதியில் 23 வேட்பு மனுக்களும், உடுமலையில் 22, திருப்பூர் வடக்கு தொகுதியில் 19, அவிநாசியில் 18, காங்கேயம் 14 மற்றும் மடத்துக்குளம் 11 வேட்பு மனுக்கள் என பதிவு செய்துள்ளனர்.


