News December 28, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்! சிக்கிய 4 பேர்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்திய போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் கதிரேசன் என்ற நபர் நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கதிரேசன் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு பெண் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Similar News
News December 29, 2025
மகளிர் அணி மாநாடு துவக்கம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிர் அணி சார்பில் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பெண்களுக்கு குடிநீர் மற்றும் நொறுவைகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டினை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் உள்ள இலட்சக்கணக்கான திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
News December 29, 2025
திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News December 29, 2025
திருப்பூர்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற இங்கே<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க


