News August 11, 2024

திருப்பூரில் பழிக்கு பழி நடந்த கொலை(2/4)

image

சிவகங்கையைச் சேர்ந்தவர் அக்னிராஜ். கடந்த 2021ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்த அக்னி ராஜை மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர். இதற்கு பழிவாங்க வேண்டும் என அக்னி ராஜின் நண்பர்கள் “அக்னி பிரதர்ஸ்” என்ற குழுவை தொடங்கி அக்னி ராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஸ், அழகு பாண்டி என 3 பேரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

Similar News

News August 19, 2025

திருப்பூர்: பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் கைது

image

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநகர் பகுதியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி என்பவர் ஆடை இல்லாமல் அப்பெண்ணின் எதிரே நின்று ஆபாசமான சைகையை காட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய போலீசார் பெரியசாமி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 18, 2025

திருப்பூர்: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

திருப்பூர் பின்னலாடை துறைக்கு அபாயம்

image

டிரம்பின் வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. சுமார் 20,000 தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதோடு, ஏறக்குறைய 30 லட்சம் பேர் வேலையிழக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைச்சாமி கூறியுள்ளார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடையில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!