News August 15, 2024
திருப்பூரில் பலத்த பாதுகாப்பு

திருப்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் என மாநகர் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News February 24, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 240-ல், வருகிற பிப்ரவரி 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். SHAREIT
News February 24, 2026
கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த 769 மனுக்கள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 769 மனுக்களை அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.