News January 17, 2026
திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

திருப்பூர் தென்னம்பாளையத்தில் ஒரு வீட்டில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,300-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(50), சுரேந்தர்(21), வெங்கடாசலம்(44), ராமசாமி(52), செந்தில்(52) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
Similar News
News April 14, 2026
காவலர்களின் அடிப்படை ஊதியம் உயர்த்தப்படும்: விஜய்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “காவலர்களின் அடிப்படை மாதம் ஊதியம் ரூ.18,000இல் இருந்து ரூ. 25,000ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார். மேலும், பெண் காவலர்களுக்கு என தனி ஓய்வறை, கழிப்பறை அமைக்கப்படும் எனவும், அதிக பணிச்சுமை கொண்ட காவலர்களுக்கு சுழற்சி முறை விடுமுறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
News April 14, 2026
திருப்பூர்: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 14, 2026
BREAKING திருப்பூர் விஜய் கூட்டத்தில் வேட்பாளர் மயக்கம்

அவிநாசி சட்டமன்ற தொகுதி மற்றும் பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், பிரச்சாரம் நடைபெற உள்ள பகுதியில் 3 பெண்கள் மயக்கம் அடைந்த நிலையில், தற்போது கோவை மாவட்ட சூலூர் வேட்பாளர் சுகுமார் மயக்கமடைந்துள்ளார். மொத்தம் 7 பெண்கள் உட்பட 9 மயக்கமடைந்தனர். போலீசார் அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


