News November 15, 2024

திருப்பூரில் நேற்று சுவாரஸ்ய நிகழ்வு

image

திருப்பூர் வாவிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 6 முதல் +2 வரை, 581 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கு தனித்தனி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மதியம், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இணைந்து சமைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவுகள் பரிமாறினர். ஆசிரியர்கள் சமைத்த உணவை மாணவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

Similar News

News March 1, 2026

திருப்பூர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்

News March 1, 2026

திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

News March 1, 2026

திருப்பூரில் தவெகவிற்கு பெருகும் ஆதரவு!

image

திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்டச் செயலாளர் பாலமுருகனை நேரில் சந்தித்த பல்சமய நட்புறவு கழகத்தினர், வரும் தேர்தலுக்கான தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதற்கான ஆதரவுக் கடிதத்தை மாவட்டத் தலைவர் ஷாஜகான் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்டத் துணைத் தலைவர் நூர் முகமது மற்றும் மாநகர இளைஞரணி பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் பாலமுருகனுக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

error: Content is protected !!