News March 8, 2025
திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

இந்துக்கள் கோயில் கட்ட ஜமாத் அமைப்பினர், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, திருப்பூர் அருகே விநாயகர் கோயில் கட்டுவதற்கு, தானமாக நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள், குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
Similar News
News March 9, 2025
காங்கேயத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கரூர் சாலையில் உள்ளது வீரணம்பாளையம். இங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே திருப்பூரில் இருந்து கரூர் செல்ல 20 பேருடன் வேன் இன்று மாலை சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வேனில் இருந்த 15 பேர் லேசான காயமடைந்தனர். பின் அவர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News March 9, 2025
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கிடா விருந்து

திருப்பூர் 43வது வட்ட திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 1,072 பேருக்கு அறுசுவை கிடா விருந்து வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. ரோட்டில் நடைபெற்றது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார். இதில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News March 9, 2025
இந்து முன்னணியினர் 300 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அபிராமியம் பகுதியில் வழிபாடு செய்த பக்தர்கள் மீது அடக்குமுறை செய்ததை இந்து முன்னணி நிர்வாகிகள் விசாரிக்க சென்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக திருப்பூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 300 பேரை நேற்று கைது செய்தனர்.