News November 22, 2024

திருப்பூரில் நாளை வாக்காளர் பட்டியல் முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 23,82,820 வாக்காளர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந்த 16 மற்றும் 17ஆம் சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) (ம) நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

JUST IN: திருப்பூரில் சொர்க்கவாசல் திறப்பு

image

திருப்பூர் மாநகர் அருள்மிகு பூமிதேவி, ஸ்ரீகனகவல்லித் தாயார் சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை “சொர்க்கவாசல்” திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர். முன்னதாக சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளிக்க தயார் நிலையில் கருட வாகனத்தில் நம்பெருமாள் வந்தார். (SHARE)

News December 30, 2025

திருப்பூரில் பாலியல் தொழில்! சிக்கிய 4 பேர்

image

திருப்பூர், கருவம்பாளையம் அருகே பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்திய போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் கதிரேசன் என்ற நபர் நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கதிரேசன் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு பெண் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

News December 30, 2025

திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாநகரில் நேற்று (டிச.29) முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!