News December 10, 2025
திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, மங்கலம், பூமலூர், இடுவாய், வேலாயுதம்பாளையம்,
அழகுமலை, பெருந்துறை, நாச்சிபாளையம், தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், ஆண்டிபாளையம், மணியாம்பாளையம், விஜயாபுரம், கோவில்வழி, முத்தணம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், பழங்கரை, கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 10, 2025
அவிநாசி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

அவிநாசி அருகே முத்துசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(45). டிரைவரான இவரை நேற்று முந்தினம் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
திருப்பூரில் கொலை! அதிரடி உத்தரவு

திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டியனிடம் பீடி கேட்டு ஏற்பட்ட தகராறில் கடந்த ஜூலை மாதம், 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் அவரை கொலை செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இளம் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2 ஆண்டுகள் இருவரையும் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
News December 9, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் இரவு நேர கொள்ளை சம்பவங்களை தடுத்திடும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் மாநகர காவல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


