News December 23, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, புதிய பஸ் ஸ்டேண்ட், நெசவாளர் காலனி, அருள்ஜோதிபுரம், முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், லட்சுமி நகர், ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ரங்கநாதபுரம், கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், இட்டேரி ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 28, 2025
திருப்பூர்: திருமணம் ஆக போகும் பெண்களுக்கு! CLICK

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. இதை பெற திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அனுகவும். (SHARE பண்ணுங்க)
News December 28, 2025
திருப்பூர்: 10th/ ITI முடித்தால் ரயில்வேயில் உடனடி வேலை

ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 “குரூப் டி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, மருத்துவ சோதனை. சம்பளம்: ரூ.18,000 முதல் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News December 28, 2025
திருப்பூரில் பாலியல் வழக்கில் அதிரடி கைது

திருப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய மணிகண்டன், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


